பேருந்து நிலையத்தில் இரண்டு குழுக்களாகப் பிரிந்து மாணவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் பள்ளிக்கூடங்கள் முடிந்த பிறகு மாணவர்கள் பேருந்தில் ஏறி வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த மாணவர்கள் சிலர் இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.