Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கடையில் இருந்த கணவன்-மனைவி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பேருந்து ஓட்டுனர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டீ.கே மண்டபம் கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அலமேலு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மற்றும் மனைவி இரண்டு பேரும் வீட்டை பூட்டி விட்டு தங்களின் சொந்த பெட்டிக்கடையில் இருந்துள்ளனர்.

அப்போது மர்ம நபர்கள் அவரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 20 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து சேட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |