தனியார் பேருந்தில் பயணம் செய்த மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சயனாபுரம் புதுகண்டிகை பகுதியில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் பல மாணவர்கள் படியில் நின்றவாறு பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.
இதனை அடுத்து பேருந்தில் பள்ளூர் பருவமேடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது படியில் நின்றவாறு பயணம் செய்த மாணவர் தினேஷ்குமார் திடீரென கால் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ளார். பின்னர் உயிருக்குப் போராடிய தினேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.