திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு “பெருமாள் தரிசனம் நிகழ்ச்சி” என்கின்ற தலைப்பில் 108 திவ்ய தேசங்களில் காட்சி தரும் பெருமாள்களை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி இதனை துவக்கி வைத்தார். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீ ரங்க ரங்கநாதர் கோவில் சுந்தர் பட்டம் ஆகியோர்கள் இதில் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து 108 பெருமாள்கள் தரிசனத்தை அனைவரும் ஒரே நேரத்தில் கண்டு களிப்பதோடு நாள்தோறும் நடைபெறும் ஆன்மீக சிறப்பு சொற்பொழிவுகளை கண்டு களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வைணவ திவ்விய ஸ்தலங்களில் எழுந்தருளி இருக்கும் 108 பெருமாளும் ஒரே இடத்தில் காட்சி தரும் வகையில் இந்த பிரம்மாண்டமான அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே வைணவத்தின் மீது ஈடுபாடு உள்ள பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.