Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. கோவிலில் சிறப்பு வழிபாடு…. போலீஸ் பாதுகாப்பு….!!

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள பிரசித்தி வாய்ந்த தேவநாதசுவாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று அதிகாலையில் சாமியின் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றுள்ளது. அதன்பின் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்த நிலையில் மகா தீபாராதனையும் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து கோவிலில் பிரம்ம உற்சவம் தொடங்கி 7-வது நாள் என்பதால் வெண்ணை தாழி சேவை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் சாமி கோவிலின் உட்புறத்தில் உலா வந்துள்ளார். பின்னர் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விழாக்காலங்களில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனத்துக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் திருவந்திபுரம் பகுதியில் வந்து காத்திருந்தனர்.

அதற்கு பிறகு காலையில் எழுந்து சாமியை தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு பக்தர்கள் திரண்டு வந்த நிலையில் கோவில் நடை சாத்தப்பட்டு இருப்பதால் வெளிப்புறத்தில் கற்பூரம் ஏற்றி கோபுரத்தை தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவில் முன்பாக பொதுமக்கள் கூடுவது தவிர்ப்பதற்காகவும், குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்காகவும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

Categories

Tech |