பேருந்தில் கண்டக்டரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலியிலிருந்து சிங்கிகுளம் வழியாக களக்காட்டிற்கு ஒரு தனியார் பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அதில் சின்னசாமி என்பவர் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்த பேருந்தில் சிங்கிகுளம் பகுதியில் வசிக்கும் துரைப்பாண்டியன் என்பவரும் பயணம் செய்தார். இந்நிலையில் சமையல் தொழிலாளியான அவர் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்து கொண்டிருந்ததார், இதனைப் பார்த்த கண்டெக்டர் சின்னசாமி துரைப்பாண்டியனை பேருந்துக்குள் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் துரைப்பாண்டியன் வர மறுத்து கண்டக்டர் சின்னசாமியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் பேருந்து சிங்கிகுளத்திற்கு வந்ததும் துறைப்பாண்டியனுக்கும் கண்டக்டர் சின்னசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த துரைப்பாண்டியன் தான் வைத்திருந்த அரிவாளால் சின்னசாமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சின்னசமி பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பயணிகள் சின்னசாமியை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து களக்காடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துரைப்பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.