மெக்சிகோவில் பேருந்தில் பயணிகளிடம் கொள்ளை அடிக்க முயன்ற இரு நபர்களை பயணிகள் அனைவரும் அடித்துக் கொன்ற சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் பேருந்து ஒன்றில் நுழைந்த இரு கொள்ளையர்கள் துப்பாக்கியைக் கொண்டு மக்களை மிரட்டி கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது சீருடையில் இல்லாமல் இருந்த காவல் அதிகாரி ஒருவர் அந்தப் பேருந்தில் பயணம் செய்த நிலையில், உடனடியாக துப்பாக்கியை எடுத்து அந்த இரு கொள்ளையர்களையும் சுட்டுள்ளார். அதனைக் கண்டு ஆத்திரமடைந்த பயணிகள் அனைவரும் எழுந்து கொள்ளையர்கள் இருவரையும் பயங்கரமாக தாக்கியுள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பிச் செல்ல முயற்சித்த போது, பயணிகள் அனைவரும் மிகுந்த கோபத்தில் கொள்ளையர்கள் இருவரையும் தாக்கியதில் அவர்கள் உடல் மட்டும் தான் மிஞ்சியது. பயணிகள் அனைவரும் கொள்ளையர்களை அடித்தே கொன்று விட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மெக்சிகோவில் இதேபோன்று கொள்ளையன் ஒருவனை பயணிகள் பயங்கரமாக தாக்கியது குறிப்பிடத்தக்கது.