Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் கைலதான் வச்சிருந்தேன்” டிரைவர் கண்டெக்டர் செய்த செயல்…. குவியும் பாராட்டுகள்….

பேருந்தில் தவற விட்ட பையை உரிமையாளரிடம் ஒப்படைத்த டிரைவர் மற்றும் கண்டெக்டரை சக ஊழியர்கள் பாராட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டத்திலுள்ள சிவலிங்கபுரம் பகுதியில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் இருந்து பொன்னமராவதிக்கு வரும் அரசு பேருந்தில் திண்டுக்கல்லில்  ஏறி கொட்டாம்பட்டி பகுதியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் அவர் 9 1\2 பவுன் தங்கச்சங்கிலி, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வங்கி ஏ.டி.எம். கார்டு, ரூ. 2000 உள்ளிட்டவைகள் வைத்திருந்த பையை பேருந்தில் தவற விட்டு சென்றுள்ளார். அதன்பின் மகாலட்சுமி பேருந்தை விட்டு இறங்கி தன் கையில் இருந்த பையை தேடினார். அப்போது அவர் பையை பேருந்தில் தவறவிட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மகாலட்சுமி கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் போக்குவரத்து பணிமனையில் உள்ள பொறுப்பு மேலாளர் கருப்பையாவிடம் பொன்னமராவதி பகுதியை வந்தடைந்ததும் அரசு பேருந்து டிரைவர் மற்றும் கண்டெக்டர் ஆகியோர் யாரோ ஒருவர் இந்த பையை தவற விட்டு சென்றதாக ஒப்படைத்துள்ளனர். அதன்பின் கருப்பையா உரிய விசாரணை செய்து பேருந்தில் தவறவிட்ட பையை மகாலட்சுமியை வரவழைத்து ஒப்படைத்தார். இந்த நேர்மையான செயலை செய்ததற்காக டிரைவர் மற்றும் கண்டெக்டரை  கிளை மேலாளர் மற்றும் சக ஊழியர்கள் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |