23 பேருந்துகளில் உள்ள ஏர் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவத்திலுள்ள கோவில்பட்டி நகரில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன. இதனால் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், போக்குவரத்து கழக உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் திடீரென ஆய்வு நடத்தினா்.
அந்த ஆய்வில் 23 தனியார் பேருந்துகள் மற்றும் மினி பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.