Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேருந்து வசதி இல்லாததால்…. ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மலைகிராம மாணவர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

பேருந்து வசதி இல்லாததால் மலை கிராம மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலை மீது கல்வராயன் மலை அமைந்துள்ளது. அப்பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் அந்த மலைப்பகுதியில் வாழும் மலை கிராம மாணவர்கள் கல்வி செல்வதை பெறுவதற்கு போராடி கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது மலைகிராம மாணவர்கள் பல சுமைகளை கடந்து உயிரை பணயம் செய்து தான் கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் சமவெளி பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வந்து செல்கின்றனர். இதேபோன்று இவர்களால் குறித்த நேரத்தில் வந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் இவர்களுக்கான பேருந்து வசதிகள் இல்லாததால் இந்நிலை ஏற்படுகிறது.

இதனால், மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால் அங்கு வரும் லாரி, சரக்கு வாகனம், டிராக்டர் என்று ஏதேனும் ஒரு வாகனத்தில் ஏறி செல்கின்றனர். மேலும் மலைபாதையில் இவர்கள் மேற்கொள்ளும் இடர்களை கடந்து தான் இவர்கள் கல்வி பயில்கிறார்கள். கொரோனா காலக்கட்டத்தில் சமவெளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. ஆனால் அத்தகையை கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் மலை கிராம மாணவர்களுக்கு இல்லை. தற்போது பள்ளி திறந்தபோதிலும், கல்வி கற்க செல்ல போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை.

இதுகுறித்து மலைவாழ் பகுதி மாணவர்கள் கூறுவதாவது, கல்வராயன் மலையில் 171 கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் மலைபகுதியில் மேல்நிலை பள்ளி இருந்தும், சுமார் 70-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், மலை அடிவாரத்தில் உள்ள மூலக்காடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று தான் படித்து வருகிறோம். தற்போது நாங்கள் பள்ளிக்கு சென்று வரும் காலை மற்றும் மாலை நேரங்களில் குறித்த நேரத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் எங்களுக்கு காலை 9 மணிக்கு சேராப்பட்டில் இருந்து மூலக்காடு கிராமம் வழியாக சங்கராபுரத்திற்கு செல்லும் அரசு பேருந்தில் சென்றால் 10 மணிக்கு மேல் தான் மூலக்காடுக்கு செல்ல முடிகிறது.

எனவே இந்த பேருந்தில் நாங்கள் செல்ல முடிவதில்லை. இதனால் நாங்கள் கிடைக்கும் வாகனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டுமென்றால் காலை 8 மணிக்கு  சேராப்பட்டில் இருந்து பேருந்தை எடுத்தால் ஓரளவுக்கு குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியும். எனவே அதிகாரிகள் பேருந்து நேரத்தை மாற்றி அமைத்திட வேண்டும்  இல்லையெனில் மாணவர்களுக்கென்று தனியே பேருந்து இயக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

Categories

Tech |