Categories
உலக செய்திகள்

தொடங்கவுள்ள தூய்மைபடுத்தும் திட்டம்…. பயன்படுத்தபடும் நவீன கருவிகள்…. செய்யப்போகும் தொண்டு நிறுவனம்…!!

பெருங்கடலில் உள்ள கழிவுகளை நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி குப்பைகளை அகற்றும் திட்டமானது வருகிற ஜூலை 27 தேதி தொடங்க உள்ளதாக தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

உலகில் ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் பெருங்கடல்களில் சுமார் 20 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் குப்பையை தூய்மைப்படுத்தும் விகிதத்தைவிட குப்பைகள் குவிக்கப்படும் அளவு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனை அடுத்து 2013  ஆண்டிலிருந்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று கழிவு மற்றும் தூய்மை விகிதங்களை சமன்செய்ய பணியாற்றி வருகிறது. இதற்கு போயன் ஸ்லாட் என்பவரால் தொடங்கப்பட்ட பெருங்கடல் சுத்தம் செய்தல் திட்டமானது கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படவுள்ளது.

இத்திட்டமானது ஜூலை 13 ஆம் தேதியில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை அடுத்து விக்டோரியாவின் கடற்கரை பகுதியிலிருந்து ஜூலை 27 ல் தொடங்கப்படவுள்ளது. இது தி கிரேட் பசிபிக் கார்பேஜ் பேட்ச் என்ற பயணம் நோக்கி செல்லும். இதன் மூலம் கலிபோர்னியா மற்றும் ஹவாய்  பகுதியின் இடையில் 1.6 மில்லியன் சதுர கி.மீ பரப்பில் உள்ள குப்பை குவியல்களை சேகரிக்க இந்த தொண்டு நிறுவனத்தின் பிளாஸ்டிக் சேகரிக்கும் தொழில்நுட்பமான சிஸ்டம்002 அல்லது ஜென்னி என்ற கருவி பயன்படுத்தப்பட உள்ளது. இது ஒரு (ஜென்னி) செயற்கை கடற்கரை மற்றும் இதன் நீளம் 800 மீட்டர் ஆகும்.

இந்த கருவியானது குப்பைகளை இழுத்துச் சென்று இறுதியில் பசுபிக் கார்பேஜ் பேட்சில் சேகரிக்கும். இந்த செயற்கை கடற்கரை 2 பெரிய கப்பல்களின் உதவியால் வினாடிக்கு 6.75 மீட்டர் வேகத்தில் நகரும். இதனை அடுத்து இந்த 2 கப்பல்களும் கம்ப்யூட்டர் ஜெனரேட்  மாதிரிகளை பயன்படுத்தி செயல்படும். இந்த திட்டத்தின் மூலம் கப்பல்கள் இயற்கை ஹாஸ்பாட்கள் என்று அழைக்கப்படும் குப்பைகள் அதிகமாகவோ அல்லது இலக்குகள் உள்ள இடங்கள் நோக்கி செல்ல உதவி புரியும். இந்த கருவியானது குப்பைகள் சேகரிப்பு மற்றும் கடலில் அதன் ஆயுளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கருவியின் மூலம் பிளாஸ்டிக் தனியாக பிரித்தெடுத்தல், நீண்ட ஆயுளின் தாக்கம், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற செயல்பாடு அம்சங்களில் கவனம் செலுத்தும். இந்த கருவியின் சோதனைகள் நாம் எதிர்பார்கும்படி இருந்தால் பெருங்கடல் தூய்மைப்படுத்துதல் என்பது நிலையானதாக அமையும். இது 15 வினாடிகளுக்குள் சுமார் 1.3 ஹெக்டர் பரப்பளவு சுத்தம் செய்யும். மேலும் 2040க்குள் 90% சதவீத பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் இருந்து அகற்றுவதே தி ஓஷன் கிளீனப்பின் நீண்ட நாள் கனவாகும் என்று தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. இதுவரை பல பில்லியன் டாலர்கள் கழிவுகளை அகற்றுவதற்காக இந்த தொண்டு நிறுவனம் செலவழித்துள்ளதாம்.

Categories

Tech |