சாலையில் சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டையில் இருந்து சங்கராபுரம் நோக்கி செல்லும் அரசு பேருந்தை ஏழுமலை என்ற ஓட்டுநர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து பாரத ஸ்டேட் வங்கி முன்பாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென பெரியமணியந்தல் கிராமத்தில் வசிக்கும் பன்னீர்செல்வம் என்பவர் வழிமறித்துள்ளார். அதன்பின் பேருந்தில் ஏறி ஓட்டுனரிடம் தகராறு செய்து நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதைக் கண்டு பேருந்தில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து பேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.