பேருந்தை வழிமறித்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்கடை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் திடீரென தனியார் பேருந்தை கட்டையை காண்பித்து வழிமறித்துள்ளார். இந்நிலையில் அந்த வாலிபர் ஓட்டுனரிடம் ஏன் பேருந்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் எனக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நந்தகுமாரவேல் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.