அரசு பேருந்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் ஜீவா என்பவர் சாக்கு மூட்டைகளில் 240 மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து ஜீவாவை விசாரணை செய்த போது அவர் பெங்களூருவிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி அதை சாக்கு மூட்டையில் வைத்து சந்தேகம் வராமல் இருப்பதற்காக மேல் பகுதியில் காய்கறிகளைப் போட்டு மறைத்து வைத்திருந்தது காவல்துறையினர் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜீவாவை கைது செய்து அவரிடம் இருந்த 240 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.