பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் பகுதியில் மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இந்திரா அரசுப் பேருந்தில் வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது பனகல் ரோடு அரசு மருத்துவமனையின் எதிரே பேருந்து வந்து கொண்டிருக்கும் போது அவர் கையில் வைத்திருந்த பையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
அதில் இந்திரா 6 பவுன் தங்க நகை வைத்திருந்திருக்கிறார். இது தொடர்பாக இந்திரா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.