பேருந்தில் பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் கடையம் வடக்குத் தெருவில் கணேசன் மகள் முத்துலட்சுமி வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் முத்துலட்சுமி கையில் வைத்திருந்த செல்போனை திருடிச் சென்றுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி சத்தமிட்டுள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அந்த நபரை மடக்கிப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர வழக்குபதிவு செய்து பெண்ணிடம் செல்போன் திருடிய மந்தித்தோப்பு ராஜகோபால் நகரைச் சேர்ந்த சூர்யாவை கைது செய்தனர்.