Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கல்லூரி பேருந்து மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்குட்டை பகுதியில் நவீன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நவீன் குமார் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த கல்லூரி பேருந்து மோதி உள்ளது. இந்த விபத்தில் நவீன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவீன் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்த போது சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பேருந்து அதிவேகமாக இயக்கியதால் தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நவீன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |