Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

650 பேருந்துகள் இயக்கம்…. பேருந்து நிலையங்களில் திரண்ட மக்கள்…. அதிகாரிகளின் தகவல்….!!

கன்னியாகுமரியில் பேருந்து போக்குவரத்து வழக்கம் போல் இருந்ததால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு குறைவான அளவில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படாத ஈரோடு ,கரூர், சேலம், நாமக்கல், நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், திருவாரூர் உட்பட 11 மாவட்டங்களுக்கு கன்னியாகுமரியில் இருந்து பேருந்து போக்குவரத்து சேவை இல்லாமல் இருப்பதனால் பொதுமக்கள் ரயில்வே மூலம் சம்பந்தப்பட்ட ஊர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் ஒரே விதமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து கோவை, திருப்பூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களுக்கும் கன்னியாகுமரியில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டது.

இதனையடுத்து அரசு போக்குவரத்து கழகம் சார்பாக நாகர்கோவில் வடசேரி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கோவைக்கு 8 பேருந்துகள் இயக்கப்பட்டது. இதேபோன்று திருப்பூருக்கு 2 பேருந்துகள் இயக்கப்பட்டு  பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இவ்வாறு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக தற்போது மொத்தமாக சுமார் 650 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் நாகர்கோவில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக ஓசூருக்கு 2 பேருந்துகளும், கடலூர் மற்றும் வேளாங்கண்ணிக்கு 1 பேருந்தும், கோவைக்கு 4 பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆகவே கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து வழக்கம்போல் இருந்ததால் பேருந்து நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

Categories

Tech |