பேருந்து நிலையத்தில் படுத்துறங்கிய முதியவருக்கு மூன்று சக்கர சைக்கிள் அடையாள அட்டை மாதாந்திர உதவித்தொகை வழங்கி திருவண்ணாமலை ஆட்சியர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை நகர மத்திய பேருத்து நிலையம் அருகே முதியவர் ஒருவர் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனை அவ்வழியே செல்லும்போது கவனித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி காரை நிறுத்திவிட்டு முதியவருடன் நடந்து சென்றார். இதனைத் தொடர்ந்து முதியவருக்கு தற்காலிக பண உதவி செய்வதோடு அவருக்கு மழையில் நனையாத மேற்கூரை பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்ட மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார்.
முதியோர் உதவித் தொகைக்கான அரசு ஆணை மற்றும் அம்மா உணவகத்தில் நாள் முழுக்க இலவசமாக சாப்பிட அடையாள அட்டை ஆகியவற்றை முதியவரிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். ஆட்சியரின் இச்செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.