Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“தறிகெட்டு ஓடிய பேருந்து” காயமடைந்த நபர்கள்…. காவல்துறையினரின் விசாரணை….!!

தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 5 நபர்கள் காயமடைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு, தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது தறிகெட்டு ஓடி தடுப்பு சுவர் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பேருந்தில் பயணித்த தொழிலாளர்களில் 5 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |