Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை…. இந்த இடத்தில் பேருந்து நிலையம்…. அமைச்சரின் திடீர் ஆய்வு….!!

புதிய பேருந்து நிலையம் அமைக்க இருக்கும் இடங்களை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை, காரியாபட்டி பகுதியில் இருந்து ராமேசுவரம் செல்பவர்கள் திருச்சுழி வழியாகத்தான் செல்ல வேண்டியது இருக்கின்றது. இதனால் இங்கு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் திருச்சுழி இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க ஊராட்சி ஒன்றிய குழுவில் தீர்மானம் செய்யப்பட்டது.

அதன்படி பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது திருச்சுழி யூனியன் தலைவர் பொன்னுத்தம்பி, மாநில செயற்குழு உறுப்பினர் மணிவாசகம் மற்றும் பெரும்பாலானோர் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |