எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து பழங்கால எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பெரு தலைநகர் லிமாவில் எரிவாயு குழாய்கள் இணைப்பதற்காக குழி தோண்டியுள்ளனர். அப்பொழுது அங்கு எதோ பொருட்கள் தென்பட்டுள்ளது. இதனையடுத்து இது குறித்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து 6 சடலங்கள், 24 கலைப்பொருட்கள் மற்றும் பழங்கால குவளைகளை மீட்டெடுத்துள்ளனர்.
இவைகள் அனைத்தும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹிஸ்பானிய மக்களின் கல்லறை எச்சங்கள் என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இது தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.