கள்ள காதலி பேச மறுத்ததால் கோபமடைந்த வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கன்னிகாபுரத்தில் வசித்து வருபவர் உதயகுமார். இவர் பாரிமுனையில் இருக்கும் மிளகாய் மண்டியில் வேலை செய்கிறார். இவருக்கு வியாசர்பாடியில் உள்ள 38 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்பு கள்ளக்காதலாக மாறியது என்று கூறப்படுகிறது. இதனையறிந்து அந்த பெண்ணின் கணவர் கண்டித்ததால், அவர் உதயகுமாரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.
இந்நிலையில் உதயகுமார் தன் கள்ள காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதும் அந்த பெண் பேசாமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த உதயகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை கொடூரமாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து பலத்த காயமடைந்த அந்த பெண் சென்னையில் உள்ள ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.