ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் தினத்தை முன்னிட்டு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் செல்லப்பிராணிகள் பற்றிய தொகுப்பு
வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதனால் மன அமைதியும் மனநிறைவும் கிடைக்கப்பெறும். அதுமட்டுமின்றி சில பிராணிகள் வளர்ப்பதனால் வீட்டிற்கு அதிர்ஷ்டமும் அதிக அளவில் கிடைக்கப் பெறும். அவை
பறவைகள்
பறவைகள் என்றாலே வாய்ப்புகளையும் அதிர்ஷ்டத்தையும் சுபிட்சமான வாழ்க்கையும் அள்ளித் தரக்கூடியது. விலங்குகளை நேசிக்கக் கூடிய சில பேருக்கு அதைக் கூண்டில் அடைத்து வைப்பது பிடிக்காது. வீட்டில் பறவைகளை வைக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள் அதைக் கூண்டில் அடைத்து தான் வளர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பறவை கூண்டில் அடைத்து வைப்பதனால் நம்முடைய செல்வத்தையும் அடைத்து வைப்பது என பொருள். அதற்கு பதிலாக பறவைகள் விரும்பக்கூடிய வண்ணம் வீட்டில் தோட்டத்தை அமைத்து அதில் அது குளிப்பதற்கான வசதிகள் அது தானே கூடுகட்டும் வசதி போன்றவற்றை செய்து கொடுக்கலாம். அதுமட்டுமில்லாமல் அது சாப்பிடும் உணவுகளை உங்கள் தோட்டத்தில் பெற்று கொடுப்பதால் அது அங்கேயே விரும்பி வசிக்க ஆரம்பித்துவிடும்.
நாய்கள்
நாய்களை வீட்டில் வளர்ப்பதனால் அது உங்களை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். நாய்கள் என்றாலே பாதுகாப்பிற்கும் விசுவாசத்திற்கும் எடுத்துக்காட்டு. வீட்டு நாய்கள் இல்லாமல் வேறு நாய்களை காப்பாற்றி வளர்த்தால் உங்களுடைய வீட்டை தேடி அதிர்ஷ்டமும் செல்வமும் வரப்போகுது என அர்த்தம். நாய்களை வீட்டில் வளர்க்க ஆரம்பித்து விட்டால் அது வீட்டை சுற்றி ஓடவும் சிரிக்கவும் உங்களை பின்பற்றவும் பழக்கப் படுத்திக் கொள்ளும். நாய்கள் நீங்கள் சொல்லிக் கொடுப்பதை ஆர்வத்துடன் செயல்படுத்த பழக்கப்படுத்தி கொள்ளும். நாய்கள் வளர்ப்பதில் உங்களுக்கு போதிய வசதிகள் இல்லை என்றால் நாய் சிற்பங்களை வீட்டில் வைப்பதால் வீட்டுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
தவளை
வீட்டின் தோட்டத்தில் தவளை இருந்தால் செல்வமும் அதிர்ஷ்டமும் உங்களை தேடி வருகிறது என அர்த்தம். இல்லை என்றால் மூன்று கால்கள் இருக்கக்கூடிய தவளையின் சிலையிலன் வாயில் நாணயத்தை வைப்பதால் செல்வத்தை பெருக்க முடியும். இந்த சிலைகளை வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைக்கும்பொழுது முன் வாசலுக்கு எதிரே வைப்பதால் செல்வம் அதிக அளவில் வந்து சேரும். சமையல் அறை படுக்கை அறை குளியல் அறை இந்த இடங்களிலெல்லாம் வைத்தால் பணம் இழப்பு நேரிடும்.
சேவல்
சேவல் பறவை இனத்தை சேர்ந்தது இது தன்னை சுற்றி இருக்கும் சூழலில் சிறந்த சக்தியை உண்டுபண்ணுகிறது. இது சுபிட்சமான வாழ்க்கை மட்டுமல்லாது அரசியல் பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாப்பைப் பெற்று தரக்கூடியது. வேலைகளிலும் வெற்றி பெற உதவுகிறது. உங்களுக்கு இதற்கான போதிய இடவசதி இல்லை என்றால் சேவலுடைய படத்தை அலுவலக மேஜையின் மேல் வைப்பதினால் பல பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
ஆமை
தோட்டத்தில் இருக்கும் சின்ன குளத்தில் ஆமையை வளர்க்கமுடியும். குறிப்பாக வடக்கு திசையில் வளர்ப்பது மிகவும் சிறப்பு. இல்லை என்றால் ஆமை சிலை வீட்டில் வைப்பதால் கூட அதிர்ஷ்டத்தை தக்கவைக்க முடியும். ஆமை சிலை வைக்கும் பொழுது அது அந்த சிலை எதில் செய்யப்பட்டது அதை எந்த இடத்தில் வைக்கிறோம் என்பதை பொறுத்து வாழ்க்கையின் வெற்றிகள் அமையும். உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க மரத்தால் செய்யப்பட்ட ஆமை கிழக்கு பகுதியில் வைப்பது நல்லது.
மீன்
உங்களுடைய வாழ்க்கை ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் இருக்க வளர்க்க வேண்டிய மற்றொரு செல்லப்பிராணி மீன். இது தண்ணீரில் நீந்துவது சிறந்த சக்தியை நமக்கு கொண்டு வரும். மீன்கள் நன்றாக பராமரிக்கப்படும் குளத்தில் அல்லது மீன் தொட்டியில் வைத்து வளர்ப்பது சிறப்பு. தங்க மீன் போன்றவற்றை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என கூறுவார்கள். மீன் வளர்ப்பதற்கு போதிய சூழ்நிலை கிடைக்காத பொழுது அது இருக்கும் ஓவியத்தை வைப்பதும் சிறப்பாகும்.
வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதானால் அதை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்க்க வேண்டும். அதுபோன்று வளர்த்து வந்தால் நன்மையே நடக்கும்.