Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பேச்சாற்றலை வளர்த்து கொள்ள வேண்டும்” சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. ஆட்சியரின் தகவல்….!!

திருக்குறளை பின்பற்றி நடந்தால் சிறந்த நிலைக்கு செல்ல முடியும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக திருக்குறள் முற்றோதல் செய்த மாணவ-மாணவிகளுக்கும், காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, உலகில் இருக்கும் செம்மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று. இதை உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்றளவும் ஒலி வடிவிலும், எழுத்து வடிவிலும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்ற மொழி தமிழ் மொழியாகும். பின்னர் நம் வாழ்க்கையில் குறைந்தது 1௦ திருக்குறளை பின்பற்றி நடந்தால் வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு செல்ல முடியும். இதில் வாழ்க்கைக்கு தேவையான பல அரிய கருத்துக்களை நமக்கு எடுத்துரைக்கின்றது.

இதனையடுத்து பேச்சாற்றல் ஒரு நபரின் தனித்துவத்தையும் மற்றும் சொல் ஆற்றலையும் வெளிக்கொண்டு வருகிறது. மேலும் ஒரு நாட்டின் தலைவரின் பேச்சுத்திறமையை அவரின் ஆளுமையை பறைசாற்றுகின்றது. இதனைத் தொடர்ந்து ஆளுமை வளர்க்கும் திறன் பேச்சாளர்களுக்கு உண்டு எனவும், மாணவ- மாணவிகள் நம் நாட்டின் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பருவத்திலேயே கற்றறிந்து அவர்களின் புகழை அனைவரிடமும் தெரிவிக்கும் பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |