கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியளவில் கொரோனா பாதித்த மாநிலத்தில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1,596 பாதிகக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில் 635 குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்கத்தில் மே 3 வரை ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட கோரி சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மருத்துவ சிகிச்சை விவரங்களை வெளியிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என அரசுத் தரப்பு வாதம் செய்தது.
மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலும் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடக்கூடாது என அரசு தரப்பு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டால் சமூக பிரச்னை ஏற்படும் என நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அமர்வு கூறியுள்ளது.