தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த கதிரவன் என்பவர் கீற்று ஏற்றி செல்லும் வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
சுகன்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து 7 வருடங்கள் ஆகிய நிலையில் இவர்களுக்கு ஜனனிகாஸ்ரீ மற்றும் வருணிகாஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுகன்யா தனது இரண்டு பெண் பிள்ளைகளையும் கணவருடன் விட்டுவிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
சுகன்யாவை சமாதனம் செய்து வீட்டிற்கு அழைத்து வர கதிரவன் முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. இதற்கிடையில் ஊரடங்கு காரணமாக கதிரவனின் தொழிலும் முடங்கிப் போனது. தனது 2 மகள்களுடன் வறுமையில் கஷ்டப்படுவது கதிரவனுக்கு மிகுந்த மன வேதனையை கொடுத்தது இதனால் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளானார் கதிரவன் .
இதனையடுத்து சம்பவத்தன்று கடையில் உணவு வாங்கி வந்த கதிரவன் அதில் விஷம் கலந்து தனது பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் அருந்தியுள்ளார்.
பிறகு மயக்க நிலையில் இருந்த மூவரையும் மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இரண்டு மகள்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். கதிரவனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.