மயிலாடுதுறை மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி மதிமுக- வினர் தபால் நிலையத்தில் மனு அளித்து போராட்டம் நடத்தினர் .
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி பிரதமருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும், டீசல் விலை 90 ரூபாய்க்கும் விலை உயர்ந்துள்ளதை கண்டித்து குத்தாலத்தில் உள்ள துணை அஞ்சலகத்தில் மனு அளித்து போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மதிமுக மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணை அஞ்சலகத்தில் உள்ள தபால் பெட்டியில் போட்டு மாவட்ட செயலாளர் மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த போராட்டத்திற்கு மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளரான அழகிரி ,குத்தாலம் ஒன்றிய செயலாளர் வாசு மற்றும் குத்தாலம் பேரூர் செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் முன்னாள் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் சுவாமிநாதன், பேரூர் துணை செயலாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.