Categories
பல்சுவை

“தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை”… வாகன ஓட்டிகள் கவலை.!!

பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது  நாளாக ஏற்றம் கண்டுள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

விலை நிர்ணயம் : 

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல  எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை  மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது.அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன.

 

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 08 பைசா உயர்ந்து 74 ரூபாய் 78 காசுகளுக்கும், அதேபோல  ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து 10 பைசா உயர்ந்து  69 ரூபாய் 09 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூன்றாவது நாளாக சற்று ஏற்றம் கண்டுள்ளதால் பொதுமக்கள்  கவலை அடைந்துள்ளனர்.

Categories

Tech |