தியேட்டருக்குள் 5 வாலிபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் திரையிடப்பட்ட கர்ணன் படத்தை பார்ப்பதற்காக 5 வாலிபர்கள் இரவு 10:15 மணிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் மது குடித்துவிட்டு வந்ததால் ஊழியர்கள் அவர்களை தியேட்டருக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் ஊழியர்கள் அந்த வாலிபர்களிடம் டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்து வெளியேற்றி விட்டனர். இந்நிலையில் மிகுந்த கோபத்தில் இருந்த 5 வாலிபர்களும் 3 மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து தியேட்டரில் படம் ஓடி கொண்டிருக்கும் போதே பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
இதனை அடுத்து வீசப்பட்ட குண்டுகள் வெடித்து தீப்பற்றிய பிறகு 5 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் தியேட்டர் மேலாளர் அருணாசலம் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்தோணிராஜ், மருதநாயகம், அந்தோணி, சந்துரு ஆகிய 4 பேரை கைது செய்து தலைமறைவான மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.