Categories
மாநில செய்திகள்

#BREAKING: பெட்ரோல் குண்டு வீச்சு – டிஜிபி எச்சரிக்கை…!!

தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்ற செயல்கள் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை கொண்டு வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவரை 250 சந்தேக நபரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் 100 நபர்களிடம் தொடர்ந்து இந்த விசாரணை ஆனது நடைபெற்று வருவதாகவும் டிஜிபி தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |