பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் ஏழை எளிய மக்கள் வாங்குவதற்காக மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்துஅவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து இந்த போராட்டத்தில் ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் அண்ணாதுரை, நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.
இதனைதொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசிடம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ராஜ்குமார், மாநில துணைத்தலைவர் நாசே. ராமச்சந்திரன், மாநில செயலாளர் அக்ராவரம் பாஸ்கர், எம்.எல்.ஏ. ஏ.எம். முனிரத்தினம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் நகர, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.