காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்துள்ளார்.
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்த்தியுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெயின் விலை குறைவாக உள்ள நிலையில் பெட்ரோல்,டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்துள்ளார். அதில், மத்திய அரசு லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு இப்படி விலை உயர்வை ஏற்றிக்கொண்டே போகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது இப்படி பெட்ரோல் டீசலை அதிக பணம் கொடுத்து மக்கள் வாங்கவில்லை. எனவே அதே போன்று வாங்க வரிவிதிப்பை குறைக்க வேண்டும். கடந்த 73 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.தற்போது ஒரு லிட்டர் டீசலின் விலை 74.38 ரூபாய்க்கும், பெட்ரோல் 84.20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கச்சா எண்ணெயின் விலை குறைவில் வரும் பலன்களை மக்களுக்கு அளிக்காமல் அதை அரசு லாபம் பார்க்கிறது.கடந்த ஆறு ஆண்டுகளாக மக்களிடமிருந்து காலால் வரியாக 19,00,000 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என்று தெரிவித்தார்.