Categories
உலக செய்திகள்

இந்தியாவிலிருந்து பெட்ரோல், டீசல் இறக்குமதி…. இலங்கை அரசு தீர்மானம்…!!!

இலங்கை, இந்தியாவிடமிருந்து டீசல், பெட்ரோல் இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்திருக்கிறது.

இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாத காரணத்தால் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிடமிருந்து இலங்கை, கடன் உதவி பெறுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்திய அரசு, சரக்குகளை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் டாலர் இலங்கைக்கு கடனாக கொடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, இன்று இலங்கையில் அமைச்சரவை கூடி, 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோலும், 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |