பெட்ரோல் – டீசல் நிலையங்களில் HDFC வங்கியின் டெபிட்- கிரெடிட் கார்டுகள் ஏற்று கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல்-டீசல் உள்ளிட்டவற்றிற்கு 0.40 சதவிகிதம் கமிஷன் எடுத்துக்கொள்ளப்படும் என்று எச்டிஎஃப்சி வங்கி சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி பெட்ரோல் நிலையம் வரும் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் டீசலை நிரப்பிவிட்டு ஹெச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட்,
டெபிட் கார்டுகள் மூலம் பணத்தை செலுத்த விரும்பினால் 30 காசுகள் வரை அவர்களுக்கு இழப்பு நேரிடும். இந்த இழப்பை தவிர்க்கும் பொருட்டு HDFC வங்கியின் கிரெடிட், டெபிட் கார்டுகள் பெட்ரோல் நிலையங்களில் ஏற்றுக் கொள்ளப்படாது என்று தமிழக பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.