பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து தற்போது வாழை இலை விலையும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வோ நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையை நடத்த சிரமமாக உள்ளது. இந்நிலையில் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களின் விலையும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. கறிவேப்பிலையின் விலை ரூபாய் 150 என்ற தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் தற்போது வாழை இல்லை விலையும் அதிகரித்துள்ளது. திண்டுக்கல் சந்தை நிலவரப்படி ஒரு கட்டு வாழை இலை தற்போது ரூ.2,500 விற்கப்படுகிறது. அதாவது 2 ரூபாயாக இருந்த நிலையில் விலை ரூ.5 ஆக உயர்ந்துள்ளது.