Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு…. எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணித்து…. கண்டனம் தெரிவித்த மம்தா…!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சில நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. எனவே விலையேற்றத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மேற்குவங்க மாநில அரசு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை ஒரு ரூபாய் அளவிற்கு குறைத்து உத்தரவிட்டது.

இதையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புதுமையான கையில் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதாவது அப்பகுதியில் உள்ள தலைமை அலுவலகம் வரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணித்துள்ளார். அத்தோடு தன்னுடைய கையில் விலையேற்றத்தை கண்டித்து கண்டன பதாகை ஒன்றும் வைத்துள்ளார்.

Categories

Tech |