Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓட்டம்… மடக்கி பிடித்த போலீசார்… விசாரித்ததில் தெரிந்த உண்மை…!!

டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை திருடிய 2 பேரை காவல்துறையினர்  கைது செய்தனர்

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் கப்பலூர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் அனைத்து தென் மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இங்கிருந்து கொண்டு செல்லப்படும் பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் டீசலை டேங்கர் லாரிகளிலிருந்து திருடுவதாக காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து திருமங்கலம்-ராஜபாளையம் நான்கு வழி சாலையில் தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அங்கு ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் இருந்த 2 நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தனர். இதனையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர்களில் ஒருவர் மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியில் வசித்து வரும் செந்தில்குமார் என்பதும், மற்றொருவர் மேலப்பொன்னகரம் பகுதியில் வசித்துவந்த விக்னேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்த காரில் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த போலீசார் அவ்விரண்டு பேரையும்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |