Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. யார் காரணம் தெரியுமா….? மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்….!!!

பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும்  வரலாறு காணாத அளவுக்கு  பெட்ரோல், டீசல் விலை  அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ரூபாய் 100 க்கும் மேல்  தலைநகர் டெல்லி, மத்திய பிரதேசம், தமிழகம், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சமையல் எரிவாயு விலை  அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ள நிலையில் தற்போது எரிபொருள் விலையும் அதிகரித்து வருவதால் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில்  பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து டெல்லியில் நடைபெற்ற கருத்தரகில்  கலந்துகொண்ட  மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்  ஹர்தீப் சிங் புரி  விளக்கமாக கூறியுள்ளார். அதில்  ” பெட்ரோலிய  பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு முன்னதாகவே குறைத்துள்ளது. இதனால் தங்களின் 50 % வாட் வரியை மாநில அரசு தான் குறைக்க வேண்டும். இதில் குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுகள் அதிக வரியை வசூல் செய்துவிட்டு மத்திய அரசை குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

மேலும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் நிர்ணயம் செய்கின்றனர். இந்த நிறுவனங்களை எல்லாம் மத்திய அரசு ஒன்றும் கட்டுப்படுத்துவதில்லை. இந்த விலை ஏற்றத்திற்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள முடக்கம் தான் காரணம். நாங்கள் நாட்டில் விலைவாசி உயர்வை கூர்ந்து கவனித்துக் கொண்டு தான் வருகிறோம். இது கவலைக்குரிய அச்சம். ஒரு அளவுக்கு மேல் விலைவாசி உயர்வை அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |