Categories
தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகத்தில் Rs.20க்கு பெட்ரோல் – மகிழ்ச்சியான செய்தி …!!

கேரளாவில் மூலிகை பெட்ரோல் தயாரிப்பு குறித்த விவரம் தெரியவந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் உலகளவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இதனால் விலை தினமும் மாறி மாறி இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்த நிலையில்தான் மூலிகை பெட்ரோல் என்ற ஒரு விஷயம் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயமாக பார்க்கப்பட்டது. மூலிகை பெட்ரோலை பயன்படுத்தி நாம் வாகனம் ஓட்டும் போது நமக்கு அதிக அளவு செலவு மிச்சமாகும் என்று ஏற்கனவே பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது மூலிகை பெட்ரோல் தயாரிப்பு பணி தொடங்கி இருப்பது கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்துகின்றது.

கேரளாவில் செப்டம்பர் 10 முதல் 77 இடங்களில் மூலிகை பெட்ரோல், டீசல், எரிவாயு உற்பத்தியை  தொடங்க உள்ளதாக ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார். கேரளாவில் வரியுடன் சேர்த்து டீசல், பெட்ரோல் விலை ரூ 39-க்கு  கொடுப்போம். பயோ கேஸை 16 லிட்டர் ரூபாய் 250 க்கும், தமிழகத்தில் தயாரிக்கும்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 20க்கும் விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.

Categories

Tech |