Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. பெயிண்டருக்கு விடுத்த மிரட்டல்…. வக்கீல் உள்பட 2 பேர் கைது….!!

பெட்ரோல் குண்டு வீசிய வக்கீல் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தையூர் குப்பம்மாள் நகர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக சங்கர் கேளம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது வரிசையில் நின்று கொண்டிருந்த போது பெட்ரோல் போட்டுவிட்டு நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தவரை சங்கர் போகும்படி கூறினார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதற்கு அந்த சங்கரிடம் அந்த நபர் நான் வக்கீல் என கூறி கத்தியை காட்டி மிரட்டி தாக்கியுள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர். இந்நிலையில் அந்த வக்கீல் தனது நண்பருடன் அந்த பகுதிக்கு வந்து சாலையில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இதுகுறித்து அந்த ஊர் மக்கள் கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசியது புதுப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் வக்கீல் சிவபிரசாத் மற்றும் என்ஜினியரிங் கல்லூரி மாணவர் விக்னேஸ்வரன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 2 கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |