பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
சேலம் மாவட்டம் காந்தி சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து திராவிட விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அருள்குமார், கிருஷ்ணன், டேவிட் உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கண்ட 5 பேரும் வழக்கு விசாரணைக்காக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதை விசாரித்த நீதிபதி குமரகுரு வருகின்ற 28-ம் தேதி வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.