வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அயர்லாந்து நாட்டில் கிரீஸ்லொக் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் பெட்ரோல் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தன. அந்த சமயத்தில் அங்கு திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தால் அங்க பெரும் பகுதி சேதம் அடைந்துள்ளது.
மேலும் இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானதாகவும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் பெட்ரோல் பங்கில் வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.