Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…. “வீடு தேடி வந்த ஓலா ஸ்கூட்டர்”…. இப்படியொரு சர்ப்ரைஸா?… திகைத்து நின்ற வாகன ஓட்டிகள்….!!!.

இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாற தொடங்கி உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் ஓலா நிறுவனம் சார்பாக S1, S1 pro ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு முன்பே நடைபெற்றது. இதில் முன்பதிவு செய்தவர்கள் எப்போது இந்த ஸ்கூட்டர் வீட்டுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் டிசம்பர் 15-ம் தேதி முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான டெலிவரி தொடங்கி உள்ளது. ஸ்கூட்டரை வாங்கிய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். சர்வதேச அளவில் செமி கண்டக்டர் சிப்களுக்கு தட்டுப்பாடு இருந்தால்தான் டெலிவரி தாமதமானது. ஆனால் தற்போது நிலைமை சரியாக டெலிவரி தொடங்கி உள்ளது. அதன்படி முதற்கட்டமாக பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களில் உள்ள 100 வாடிக்கையாளர்களுக்கு ஓலா S1, S1 pro ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  பவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்த ஸ்கூட்டரில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கிறது. அதாவது பிரேக்கிங் சிஸ்டம், சார்ஜிங் பாயிண்ட், புளூடூத், வைஃபை, கடிகாரம், டிஜிட்டல் டிரிப் மீட்டர், ஸ்பீடோ மீட்டர், ஓலா ஆப் இணைப்பு, ஃ பைண்ட்  மை ஸ்கூட்டர், குரூஸ் கண்ட்ரோல், நேவிகேசன் ஸ்டீரிங் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கிறது. இவைதான் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்கூட்டர்களின் விலையும் குறைவாகவே இருக்கிறது. இதன் விலையானது  மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. S1 ஸ்கூட்டரின் விலை 99,999 ரூ மற்றும் S1 pro ஸ்கூட்டரின் விலை 1,29,999 என்ற அளவில் தொடங்குகிறது.

Categories

Tech |