Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

100-ரூபாயை தாண்டியது…. லாரி உரிமையாளர்களின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பெட்ரோல் டீசல், விலை 100- ரூபாய் தாண்டி விற்கபடுவதனால்  லாரி போன்ற சரக்கு வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மன்னார்குடி மேலப்பாலம் அருகில் உள்ள லாரி நிறுத்துமிடத்தில் லாரிகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்திற்கு மன்னார்குடி தாலுகா லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.

இதில் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் ராஜா, பொருளாளர் நீலகண்டன், துணைத் தலைவர் ராஜாராம் போன்ற நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பெட்ரோல், டீசல் விலை மற்றும் லாரிகளுக்கான காப்பீட்டு கட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்னதாகவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று லாரி உரிமையாளர் சங்கத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |