புதுச்சேரியில் கடன் பாக்கி வைத்ததால் அரசுக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் அமைச்சரின் காருக்கு பெட்ரோல் போட மறுப்பு தெரிவித்த சம்பவம் ஆட்சியாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபிக்கு சொந்தமான பெட்ரோல் பங்குகளில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள்களை நிரப்பி வருகின்றனர். இதற்கான தொகையை புதுச்சேரி அரசு செலுத்தி வருகின்றது. இந்நிலையில் இரண்டரை கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்ததால் டிசம்பர் 31ம் தேதிக்கு பின் எந்த அரசு வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க முடியாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜனவரி 2ம் தேதி இரவு காரைக்காலுக்கு சென்றிருந்த வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் காருக்கு மீண்டும் புதுச்சேரி செல்ல தனக்கு காருக்கு பெட்ரோல் போடுவதற்காக அரசு பெட்ரோல் பங்கிற்கு சென்றார். ஆனால் அங்குள்ள ஊழியர்கள் அவருக்கு எரிபொருள் தர மறுத்ததால் அவர் அரசு பேருந்தில் புதுச்சேரி வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுங்கட்சியிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.