சென்னை வண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை கோவில் தெரு மேற்கு மாட வீதியில் கடந்த மாதம் 26ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்ட பொழுது பொதுமக்கள் பார்த்து கூச்சலிட்டதால் அவர்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து பெட்ரோலை திருடவிடாத ஆத்திரத்தில் அவர்கள் கடந்த 28ம் தேதி நள்ளிரவு அப்பகுதிக்கு சென்று தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.
மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த காவல்துறையினர் கொருக்குப்பேட்டையில் பெட்ரோல் குண்டு வைத்திருந்த அப்பு என்பவரை கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சூரியகுமார் கணபதி ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.