தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மேற்குவங்கம், ஜாா்க்கண்ட் போன்ற பா.ஜ.க ஆட்சி அல்லாத 6 மாநிலங்கள் பெட்ரோலிய பொருட்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (வாட்) குறைக்கவில்லை. ஆகவே இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது என பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவா் இவ்வாறு கூறினார். இதற்கிடையில் சமையல் எரிவாயு விற்பனையால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அதற்காக ஒரே தவணையில் ரூபாய்.22,000 கோடி இழப்பீடு வழங்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது என ஹா்தீப் சிங் புரி குறிப்பிட்டாா்.