Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே ஜாக்கிரதை… நண்பனாக பழகிய நபர்… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!!!

8 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

காரைக்காலை அடுத்த நெடுங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் என்பவர். அவருக்கு 48 வயதாகிய நிலையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். அப்பகுதியில் கூலி வேலை செய்துவரும் மற்றொரு  குடும்பத்துடன் நட்புடன் பழகி உள்ளார். அந்த மற்றொரு கூலித்தொழிலாளியின் மகளான நான்காம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை ஜெயராமன் அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவற்றால் அச்சிறுமிக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அவளிடம் கேட்டபோது தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜெயராமன் செய்ததை கூறியுள்ளாள். இவற்றைக் கேட்டு அச்சிறுமியின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர்கள் நெடுங்காடு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஜெயராமனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பின்பு அவர் காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின் நீதிபதியின் உத்தரவின் பேரில் ஜெயராமன் புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டார்.8 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததை எண்ணி அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளார்கள்.

Categories

Tech |