10 – ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் நகர் பகுதிகளில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 10 – ஆம் வகுப்பு படித்து வந்த தனுஜா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தனுஜாவிற்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு நடைபெறுவதால் அவரின் பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் தனுஜா வாட்ஸ் அப் மற்றும் முகநூல்களை அடிக்கடி பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து தனுஜாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் மன அழுத்தத்தில் இருந்த தனுஜா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் தனுஜாவை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தனுஷா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த சென்னிமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.